யாழ்.போதனா மருத்துவமனையில் நோயாளர் நட்புறவாளர் சேவை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மன்றத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நோயாளர் நட்புறவாளர் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை நாடும் நோயாளிகளின் அடிப்படைத் தேவை களை இலகுபடுத்தி நோயாளரின் சுகாதார நலன் பெறுதலை வினைத்திறனாக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மருத்துவம், உளவள ஆலோசனை சார்ந்த துறையில் கற்கையை (NVQ3 Level) பூர்த்தி செய்தவர்கள் அல்லது அதே துறையில் குறைந்தது மூன்று வருட அனுபவத்துடன் சமூக சேவைப் பின்னணி உள்ளவர்கள் குறித்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் இரண்டு வாரங்கள் பணிசார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். பொருத்தமான ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சுயவிபரக்கோவையை இல 69, புங்கன்குளம் வீதி, அரியாலை, யாழ்ப்பா ணம் எனும் முகவரிக்கு எதிர்வரும்15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறும். மேலதிக விவரங்களுக்கு 0770024334 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவக்கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.