Viral Video: குட்டி யானை செய்த அட்டகாசம்… கூட்டமாக வேடிக்கை பார்த்த கொக்கு

குட்டி யானை ஒன்று கூட்டமாக நின்ற கொக்குகளுக்கு மத்தியில் நின்று கொண்டு செய்துள்ள சேட்டை பார்வையாளர்களை கவலை மறக்கச் செய்துள்ளது.
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும். சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.
அதே போன்று யானை மற்ற விலங்குகளுடன் நட்பாக பழகுவதை நாம் அவ்வளவாக அவதானித்திருக்க மாட்டோம். இங்கு அப்படியொரு காட்சியினை நாம் அவதானிக்கலாம்.
அதாவது குட்டி யானை ஒன்று தனது தும்பிக்கையை மிக வேகமாக சுழற்றுகின்றது. அருகில் நின்றும் கொக்குகள் இதற்கு பயப்படாமலும், பறந்து செல்லாமலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றது.
குறித்த காட்சி பார்வையாளர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கவலையையும் மறக்கச் செய்துள்ளது.