;
Athirady Tamil News

காலநிலை உச்சி மாநாடு: சாலை அமைக்க அமேசான் காடுகளில் வெட்டப்பட்ட 1,000 மரங்கள்!

0

கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசான் காடுகளில் 1000 அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது.

பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு சாலை அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டப்பட்டுள்ள சம்பவத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை உச்சி மாநாட்டுக்கு பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள் வரவிருப்பதால், இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் காடுகள் அழிப்பினால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

அமேசான் மழைக் காடுகள் கரியமிலவாயுவை உறிஞ்சிக் கொண்டு ஆக்ஸிஜன் வழங்கும் பல்லுயிர்த் தளமாக விளங்குகிறது. சாலைகள் அமைக்கப்படுவதால், தங்களின் இயல்புவாழ்க்கைப் பாதிக்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி, இதனால், விலங்குகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நவம்பரில் நடைபெறும் இந்த மாநாட்டில் 50,000-க்கும் அதிகமான மக்கள் பயணிக்கும் வகையில், 4 வழிச்சாலைகள் அமைக்கப்படவிருக்கிறது. இது மக்களுக்கு எளிதாக போக்குவரத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையான காடுகள் அழிப்பது என்பதே காலநிலை உச்சி மாநாட்டுக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலை அமையவிருக்கும் இடத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில் வசிக்கும் கிளாடியோ கூறுகையில், “அமேசான் காடுகளில் கிடைக்கும் அகாய் காய்களை அறுவடை செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது இந்த மரங்கள் அழிக்கப்படுவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிரேசிலின் அதிபரும், சுற்றுச்சூழல் அமைச்சருமான லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா கூறுகையில், இது அமேசானில் நடைபெறும் காலநிலை உச்சி மாநாடு, அமேசான் காடுகள் பற்றிய மாநாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அமேசான் காடுகளின் தேவையை உலகுக்கு காண்பிக்கவும், அவற்றின் தேவையை அதிகரிக்கவும், காடுகளைப் பாதுகாக்க மத்திய அரசு என்ன செய்துள்ளது என்பதைக் காட்டவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் என்றும் அதிபர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.