திருகோணமலை பெண்கள் கொலையில் 15 வயது சிறுமி கைது

திருகோணமலை மூதூரில் இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது
கணவர் வெளிநாட்டில் வசித்து வருபவர் எனவும் சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உடல்கள் போலீஸ் பாதுகாப்பில் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மூதூர் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் 15 வயது சிறுமி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.