அடுத்தடுத்து சி.ஐ.டிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அத்துடன், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.