;
Athirady Tamil News

இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்ட கணவர்? திருமணமான 40 நாட்களில் பரபர புகார்

0

இருட்​டுக்​கடையை வரதட்​சணை​யாக கணவர் வீட்​டார் கேட்​கின்​றனர் என்று புது​மணப் பெண் போலீ​ஸில் புகார் தெரி​வித்​துள்​ளார்.

இருட்​டுக்​கடை விவகாரம்

நெல்லை டவுனில் ‘இருட்​டுக்​கடை’ பிரபலம். இந்த கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்​ப​தி​யின் மகள் ஸ்ரீகனிஷ்​கா. இவருக்கும், கோவையை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், கணவர், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இருட்டுக்கடை உரிமையை வரதட்சணையாக கேட்பதாகவும்,

கமிஷனர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தந்தை ஹரிசிங், தாயுடன் வந்து புகார் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிஷ்கா, எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வரதட்​சணை புகார்
இதனால் நான் மனவேதனை அடைந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் திருநெல்வேலிக்கு வந்து எனது தாயிடம், உன் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும்.

திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என்று மிரட்டினார்கள் என்றார். ஆனால் பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜா, “அதிக சொத்​துள்ள நாங்​கள் ஏன் வரதட்​சணை கேட்​கப் போகிறோம்.

இருட்​டுக்​கடையை நாங்​கள் கேட்​ப​தாக கூறு​வது ஆதா​ரமற்​றது. கார் கேட்டதாக கூறப்படுவதும் தவறான தகவல். எங்​கள் சொத்​துகளை அபகரிக்​கும் நோக்​கில் பொய்யான புகார்களைக் கூறுகின்​றனர். அவர்​களது புகாரை சட்​டப்​படி எதிர்​கொள்​வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.