;
Athirady Tamil News

ட்ரம்ப் முன்வைத்த தாதுக்கள் ஒப்பந்தம்… பணிந்தது உக்ரைன்?

0

அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து, உக்ரைனின் தாதுக்கள் சொத்துக்களை மேம்படுத்தும் என்று கூறும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தம்

ரஷ்ய உக்ரைன் போருக்காக உக்ரைனுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்துவந்ததால், பதிலுக்கு உக்ரைன் 500 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான அமெரிக்காவுக்கு அரிய தாதுக்கள் முதலான விடயங்களைத் தரவேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

ஜெலன்ஸ்கி அதற்கு மறுக்க, அவரை மோசமாக ட்ரம்ப் விமர்சிக்க, இதற்கிடையில் திரைமறைவில் என்ன நடந்ததோ தெரியாது, தற்போது தனது நாட்டின் தாதுக்களிலிருந்து கிடைக்கும் வருவாயை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, உக்ரைனின் தாதுக்கள் மூலம் கிடைக்கும் வருவாய், உக்ரைன் மற்றும் அமெரிக்கா இணைந்து உருவாக்கும் ஒரு நிதிக்கு (joint fund for Ukraine and America) செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக அந்த ஒப்பத்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்துவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அமெரிக்க கருவூலச் செயலரான Scott Bessentம் உக்ரைனுடைய முதல் துணைப் பிரதமரான Yulia Svyrydenkoவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.