கொலன்ன பிரதேச சபை பாதீடு மீண்டும் தோல்வி ; NPP பெரும்பான்மைக்கு அதிர்ச்சி
தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைக் கொண்டுள்ள கொலன்ன பிரதேச சபையின், 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.
இந்த பாதீட்டுக்கு ஆதரவாக 9 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
10 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.
கொலன்ன பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 5 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 3 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.