;
Athirady Tamil News

இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிசொகுசு கார்கள் ; தலை சுற்ற வைக்கும் விலைகள்

0

இலங்கைக்கு புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இந்த வாகனங்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த விநியோகம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த சரக்கு விமானமாக ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் சந்தை பெறுமதிக்கு அமைய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II காரின் பெறுமதி சுமார் 50 கோடி ரூபாவை தாண்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.