;
Athirady Tamil News

ரஷ்யாவின் தாக்குதலில் 3 உக்ரைனிய குழந்தைகள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சர் இரங்கல்

0

உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில், உடன் பிறந்த மூன்று குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.

பலியானவர்கள் எட்டு வயது ஸ்டானிஸ்லாவ்(Stanislav), 12 வயது தமரா(Tamara) மற்றும் 17 வயது ரோமன்(Roman) என உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் மரியானா பெட்ஸா(Mariana Betsa) உறுதிப்படுத்தினார்.

கீவ் தலைநகரின் மேற்கே அமைந்துள்ள சைட்டோமிர் (Zhytomyr) பிராந்தியத்தில் இந்தக் குழந்தைகள் உயிரிழந்தனர்.

ரஷ்யா உக்ரைன் மீது கிட்டத்தட்ட 300 ஆளில்லா விமானங்கள் மற்றும் 69 ஏவுகணைகளை ஏவி நடத்திய தாக்குதலின் மத்தியில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தத் துயரமான இழப்பு குறித்து துணை வெளியுறவு அமைச்சர் பெட்ஸா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும், குழந்தைகளின் குடும்பத்திற்கு தனது “ஆழ்ந்த அனுதாபங்களை” அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.