;
Athirady Tamil News

பிரான்ஸ் ஜனாதிபதியின் உருவச்சிலையை திருடிச் சென்ற நபர்கள்

0

அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் உருவச்சிலை ஒன்றை சிலர் திருடிச் சென்றுள்ளார்கள்.

யார் அவர்கள்?

மேக்ரானின் சிலையைத் திருடியவர்கள், Greenpeace என்னும் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஆவர்.

Grevin அருங்காட்சியகத்திலிருந்து தாங்கள் திருடிய சிலையை அவர்கள் பிரான்சிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் முன் கொண்டு வைத்துள்ளார்கள்.

அதாவது, உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிவரும் ரஷ்யாவுடன் பிரான்ஸ் இன்னமும் வர்த்தக உறவு வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இந்த செயலைச் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.