ம.பி சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

ரேவா: மத்திய பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (30) நேற்று மதியம் சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவ்வழியாக சென்ற ஆட்டோ சிக்கிக் கொண்டது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 4 குழந்தைகள், 2 ஆண்கள் ஒரு பெண் என 7 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை நதியில் புனித நீராடிவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.