;
Athirady Tamil News

இந்திய நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

0

இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நேற்று மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய துணை தூதர் சாய் முரளி, ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதியென்று குறிப்பிட்டார். இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடி வலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.

உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது, இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளது என்ற உறுதியை துணை தூதரக ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார். வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்களை அவர் விளக்கினார்.

வட மாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்துறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்தது என்றும் இருக்கும் என்றும் தூதர் உறுதியளித்தார். நம்பிக்கையும், வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நண்பனாக துணை இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.