;
Athirady Tamil News

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு

0

மணிப்பூரில் மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கிய நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. 5 மாவட்டங்களில் செல்ஃபோன் சேவை மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்ஙகளும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

அம்பால் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதால், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆரம்பை டேங்கோல் அமைப்பின் உறுப்பினர்கள் கைதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வன்முறைகளை அடுத்து மணிப்பூரில் 5 நாள்களுக்கு இணைய சேவையை மாநில அரசு தடை செய்துள்ளது. ஜூன் 7 நள்ளிரவிலிருந்து இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங், இம்பால் கிழக்கு, விஷ்ணுபுர் மாவட்டங்களில் இணைய சேவையும், செல்போன் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி சமுதாய மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மிகப்பெரிய வன்முறை வெடித்து 260 பேர் பலியாகினர். அடுத்தடுத்த கிளர்ச்சிகளால், மாநிலத்தில் அமைதி குலைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பிரண் சிங் ராஜிநாமா செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.