மன்னாரில் ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் வழங்கிய சிறுமி
மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு சிறுமி ஒருவர் நினைவு சின்னம் வழங்கியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு சனிக்கிழமை (13) மாலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
குறித்த கலந்துரையாடலின் நிறைவில் சிறுமி ஒருவர் தான் வரைந்த ஓவியம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளித்தார்.