கொலம்பியாவில் நிலநடுக்கம்
போகடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் போகடாவுக்கு 170 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் அது மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிடுக்கத்தால் போகடா நகரிலுள்ள கட்டடங்கள் குலுங்கின. அதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறினா் (படம்). எனினும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.