;
Athirady Tamil News

பிகினி ஆடைகளுக்கு தடை! ஆண்களுக்கும் மேலாடை கட்டாயம் – எங்கே?

0

பொது இடங்களில் பிகினி ஆடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பெண்கள் பிகினி அணியக்கூடாது என்றும் ஆண்களும் கட்டாயம் மேலாடை அணிய வேண்டும் என்றும் செவ்வாய்கிழமை(ஜூன் 10) புதியதொரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது சிரியா அரசு.

கடற்கரைகளில் குளிக்கச் செல்லும் பெண்கள் கட்டாயம் முழு நீள ஆடையை அணிந்து கொண்டு குளிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ‘பர்கின்ஸ்’ ரக ஆடைகளை அணியலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலாடை அணியும்போது கழுத்து, தோள்பட்டை மூடப்பட்டிருப்பதையும், இடுப்புக்கு கீழே மூட்டு வரை மூடப்பட்டிருப்பதையும் ஆடை அணியும் போது கவனத்திற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எனினும், தனியார் சொகுசு விடுதிகளில் அங்குள்ள கடற்கரைகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கண்ட ஆடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.