;
Athirady Tamil News

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக தியாகராஜா நிரோஷ் தெரிவு!

0

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவின் இது மூவர் போட்டியிட முன்மொழியப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இரகசிய முறையிலான வாக்கெடுப்புக்கு சபையின் 36 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் முதலாம் சுற்று இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் முதல் நிலை பெற்ற வேட்பாளர் பெரும்பான்மைக்குரிய வாக்கை எட்டாததால் மீண்டும் இரண்டாம் சுற்று தெரிவு இரகசியமா பகிரங்கமா என்பது தொடர்பான வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் சமமாக வந்த நிலையில் திருவுளச்சீட்டு முறைமூலம் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானித்து இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதனடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று சங்கு சைக்கிள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உபதவிசாளர் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறைமூலம் நடத்தப்பட்ட நிலையில் சங்கு சைக்கிள் கூட்டணியின் உறுப்பினரன ஜனர்த்தனன் 14 க்கு 13 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இதுவரை உள்ளூராட்சி சபைகளில் நடுநிலை வகித்து வந்த தேசிய மக்கள் சக்தி வலி கிழக்கில் தவிசாளர் தெரிவில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.