மொஸாட் மையத்தில் தாக்குதல்: ஐஆா்ஜிசி
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் அமைந்துள்ள அந்த நாட்டு உளவு அமைப்பான மொஸாட்டின் செயல்பாட்டு மையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆா்ஜிசி) தெரிவித்துள்ளது.
தங்களது தாக்குதல் காரணாக அந்த மையம் எரிந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்த ஐஆா்ஜிசி, டெல் அவீவுக்கு அருகே கிளிலாட் பகுதியில் உள்ள ராணுவ உளவு மையத்தின் மீதும் கடுமையான வான்பாதுகாப்பை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.
🚨🇮🇷🇮🇱 BREAKING: IRAN just BOMBED ISRAELI MOSSAD HQ! pic.twitter.com/6qrUEPHSSi
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) June 17, 2025
இந்தத் தகவலை இஸ்ரேல் அதிகாரிகள் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிளிலாட் பகுதி குறித்த செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு ராணுவத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள உளவு மையத்தின் மீதான தாக்குதல் குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.