;
Athirady Tamil News

ஈரானையே உலுக்கிய இஸ்ரேலின் பெண் உளவாளி! தடயமே இல்லாமல் மாயமான கதை!!

0

பல ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போலத்தான் ஈரானிலும் நடந்தது. ஈரானின் பல தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாகக் கருதிய நிலையில், இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியது. அதன் பின்னணியில் பெண் உளவாளி இருந்ததை ஈரான் தாமதமாகவே அறிந்துகொணட்து.

ஈரானுக்குள் நுழைந்து முக்கிய தலைவர்கள், உயர் அதிகாரிகளின் வீட்டுக்குள் நுழைந்த இஸ்ரேலின் பெண் உளவாளி பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் – ஈரான் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடந்த உலகை உலுக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றாக வைரலாகி வருகிறது.

ஈரானின் அணு விஞ்ஞானி என கருதப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் எவ்வாறு ஏஐ – ரோபோ உதவியுடன் படுகொலை செய்தது என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று மொசாட்டின் அரக்கி என்று கூறப்படும் அளவுக்கு வேலை செய்த பெண் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மொசாட்டின் பெண் உளவாளி காத்தரின் பெரஸ் ஷக்தாம், ஈரானுக்குள் ரகசியமாக நுழைகிறார். ஷியா முஸ்லிமாக மதம் மாறும் காத்தரின், ஈரான் உயர் தலைவர்களின் குடும்பப் பெண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்.

உண்மையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவராக காத்தரின், மிகச் சிறப்பானப் பயிற்சி பெற்றவர் மட்டுமல்ல, பிறப்பிலேயே புத்திசாலித்தமான, அழகான, தைரியமான பெண்ணாகவும் இருந்தார். அவரது புத்திசாலித்தனமும் அழகும், அனைவரையும் முட்டாளாக்குகிறது. ஈரானின் மிகக் கடுமையான பாதுகாப்பு அமைப்புகளையும் கூட என்பதுதான் விநோதம்.

முதலில் முஸ்லிம் மதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்கிறார். ஷியா மதத்துக்கு மாறுகிறார். உயர் தலைவர்களின் மனைவிகள் வரும் இடங்களுக்குச் சென்று நட்பு பாராட்டி, அவர்களது வீட்டுக்குள் விருந்தினராக நுழைகிறார். முழு நம்பிக்கையையும் பெறுகிறார்.

அரசு தலைவர்களின் வீடுகளில் அதுவும் வெளியாட்கள் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளும் தடையின்றி நுழைகிறார்.

ஈரான் – இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரிக்கிறது. முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். ஆனால், இஸ்ரேல் குறிவைத்து தாக்குகிறது. அவர்கள் கொல்லப்படுகிறார்கள். ஈரானுக்கு ஒன்றும் புரியவில்லை. துல்லியமான வரைபடத்தை யாரோ கொடுத்திருப்பது போல தோன்றுகிறது.

ஈரானின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை முடுக்குகிறது. உண்மை வெளிவருகிறது. அரசு அதிகாரிகள், முக்கிய தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மூலம் காத்தரின் அடையாளம் காணப்படுகிறார்.

ஈரானிய புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியபோதுதான், அனைத்து செல்போன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களில், காத்தரின் சப்தமே இல்லாமல் புகைப்படங்கள் எடுத்து ரகசியத் தகவல்களை நேராடியாக மொசாட்டுக்கு அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அதெல்லாம் காலம் கடந்துவிட்டதையே காட்டியது. யாருக்கும் தெரியவில்லை. கேத்தரின் எங்கிருந்து வந்தார், எங்கே சென்றார்? நாடு முழுவதும் கேத்தரின் புகைப்படங்கள் போஸ்டர்களில் ஒட்டப்படுகிறது. தேடப்படுவதாகவும் தகவல் அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். யாருக்குத்தான் தெரியும். ஈரான் உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கே தெரியாத கேத்தரின் பற்றி சாமானிய மக்கள் எங்கே தெரிந்துவைத்திருக்க முடியும்.

அவர் எங்கே, எப்படி ஈரானிலிருந்து தப்பிச் சென்றார்? என்ற எந்த தடயமும் இன்றி மறைந்துபோயிருந்தார். ஈரான் ஜல்லடைப் போட்டுத் தேடிக்கொண்டிருந்த அதே வேளையில், வேறொரு நாட்டில் வேறொரு பெயரில் வேறொரு அடையாளத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தார். ஈரானில் அவர் இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாவிட்டாலும், ஈரான் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வை விட்டுச் சென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.