;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடந்த 11வது சர்வதேச யோகா தினம்!

0

பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு இன்றையதினம் ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா,
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன், இந்திய தூதரக உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.