;
Athirady Tamil News

சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய சட்டத்தரணிகள்

0

சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் கிடம் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழி காணப்படும் இடத்திற்கு நேரில் சென்று புதைகுழிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளிடம் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். அதன் போதே சட்டத்தரணிகள் அவ்வாறு கோரியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் தாம் முன் வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான நிதியினை அரசாங்கம் தங்கு தடையின்றி விடுவிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தினை கொடுக்க வேண்டும்.

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களை சரியான முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தற்போது மீட்கப்பட்டவற்றை கொழும்புக்கு எடுத்து செல்ல வேண்டிய தேவையுள்ளது.

ஏனெனில் யாழ்ப்பாணத்தில் அதற்கான வசதிகள் இல்லை. எனவே எச்சங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் , அதன் மீதான சோதனைகளை முன்னெடுக்க ஏதுவாக ஆய்வு கூட்டமொன்றினை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டும் . அது பல விடயங்களில் பயனுள்ளதாக இருக்கும்

அகழ்வாராய்ச்சிக்கான தொழிநுட்ப வசதிகள் தேவையாக உள்ளது. அதே நேரம் நிபுணத்துவ மிக்க நிபுணர்கள் வேண்டும். நிபுணர்களின் பங்கேற்புடன் சர்வதேச கண்காணிப்புடன் இதன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எடுத்து கூறியுள்ளோம் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.