;
Athirady Tamil News

நீதிமன்ற விசாரணைக்கு ஓன்லைன் மூலம் கழிப்பறையில் இருந்து ஆஜரான நபர்.., வெளியான வீடியோ

0

உயர்நீதிமன்ற விசாரணைக்கு நபர் ஒருவர் ஓன்லைன் மூலம் கழிப்பறையில் இருந்து கொண்டு ஆஜரான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிப்பறையில் இருந்து ஆஜர்
இந்திய மாநிலமான குஜராத், உயர்நீதிமன்ற விசாரணையில் ஓன்லைன் மூலம் நபர் ஒருவர் கழிவறையில் இருந்தபடி ஆஜரான சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் நபர் ஒருவர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று தனது தொலைபேசி கமராவை தெரியும்படி வைக்கிறார்.

பின்னர் அவர் சுத்தம் செய்யும் செயல்களும் வீடியோவில் தெரிகிறது. இந்த செயல் அனைவரையும் முகம் சுழிக்கும்படி உள்ளது.

கடந்த ஜூன் 20 ஆம் திகதி தன் மீதான எப்ஐஆர் ஒன்றை ரத்து செய்யக்கோரி அந்த நபர் மனு அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை அமர்வில் தான் இந்த சம்பவம் நடந்ததாக தெரிய வருகிறது.

தற்போது நபரின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.