தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
பொருளாதார தொகைமதிப்பு – 2025/26 விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன் உள்ளிட்ட
புள்ளிவிபரம் மற்றும் தொகை மதிப்பு துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.









