;
Athirady Tamil News

நேபாளத்தை நெருங்கும் ஆபத்து? பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

0

நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள சிறிய ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அந்நாட்டின் நீரியல் மற்றும் வானியல் ஆய்வுத் துறை, அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாள நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அந்நாட்டின் கோஷி, நாராயணி, கர்னாலி, மகாகாளி, கமலா, பாக்மதி மற்றும் ரப்தி போன்ற முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயத்துக்கு கீழே இருந்தாலும், உள்ளூர் வெள்ளப்பெருக்கின் அச்சுறுத்தல் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில். டோட்டி, தாதேல்துரா, காஞான்புர், கைலாலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், 9 பேர் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான 19 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரசுவா மாவட்டத்தில், வெள்ளத்தால் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளை நேபாளத்தின் மீட்புப் படை வீரர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வெள்ளத்தில் சீனா – நேபாள இடையிலான எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ள நீர் புகுந்ததில் அந்நாட்டின் 4 நீர்மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு மின்சார சேவைகளை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.