;
Athirady Tamil News

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து – இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்!

0

யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலகி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் –

“கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கை நிறுவனம் ஒன்று பதிவு செய்த மிகச் சிறந்த மற்றும் மிகப்பெரிய இலாபமான 107 பில்லியன் ரூபாயை இலங்கை வங்கியால் பதிவு செய்திருந்தது.

குறிப்பாக இலங்கை வங்கி ஈட்டிய இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது.

இலங்கை வங்கியின் நிர்வாகமும் இயக்குநர்கள் குழுவும் ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட ஊக்கத்தொகையை குறைக்கவும், நிதி அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நிதி துணை அமைச்சர்கள் இருவரும் எட்டிய ஒப்பந்தங்களை செயல்படுத்தவும் நிதி அமைச்சகம் இன்னும் நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்கிலேயே இருக்கின்றது.

வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ஒப்புக் கொள்ளப்பட்ட ஊக்கத்தொகையில் நியாயமற்ற செயற்பாட்டுக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்த நாங்கள் அரசாங்கத்தை வலுயுறுத்துகின்றோம்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க வேண்டியிருந்தது.

ஆனாலும் இன்றைய சூழ்நிலை இதுபோன்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது

அந்தவகையில் அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை என்றால், தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்.” எனவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.