உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!
உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது.
உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சியா துலாரி, தனது மகன் அசோக் வாயிலிருந்து பாம்பின் சில பகுதிகளை அகற்றினார்.
இருப்பினும், அசோக் பாம்பின் ஒருசில பகுதிகளை ஏற்கெனவே உட்கொண்டு விட்டார். பின்னர் உடனடியாக அவர் உள்ளூர் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது.
அதிர்ஷ்டவசமாக, பாம்பு விஷமற்றதாக இருந்ததால் அசோக்கிற்கு பெரியஅளவில் பாதிப்பு ஏற்படவில்லை.