யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு
யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது.
உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.