;
Athirady Tamil News

ஹர்த்தாலுக்கு ஆதரவு தாருங்கள்!

0

18ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் ஹர்த்தாலுக்கு நாவிதன்வெளி பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான ஆதரவை வழங்கும்படி இந்திரன் ரூபசாந்தன் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

எமது வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் அதீத இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராகவும், முல்லைத்தீவில் இறந்த இளைஞருக்கு நீதி வேண்டியும், செம்மணி போன்ற இனப்படுகொலைக்கு நீதியை வழங்குமாறு கோரியும் அனைவரும் இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இது கட்சி பேதங்களுக்கு அப்பால் இனத்தின் நன்மை கருதிய ஹர்த்தால். ஆகவே அனைவரையும் ஒன்றாக ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.