;
Athirady Tamil News

நடு வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம் ; இருவர் படுகாயம்

0

தனமல்வில – மாத்தறை பிரதான வீதியின் ரணவரனாவ பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி, பேருந்து மற்றும் சிற்றூர்ந்து என்பன விபத்தில் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவர் தனமல்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.