நாட்டில் முக்கிய அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று (17) முதல் அஞ்சல் சேவையின் அனைத்து அதிகாரிகளின் விடுமுறையையும் இரத்து செய்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தபால் தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் அஞ்சல் மற்றும் விநியோக சேவைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தம்
அரசாங்கத்தின் நடவடிக்கையை மீறி வேலைநிறுத்தத்தைத் தொடரப்போவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளை தபால் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்த தீர்மானம் அத்தியாவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.