;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிராக கிளம்பியது உக்ரைன்! அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றார் ஜெலன்ஸ்கி

0

ஈரானிய Shahed ட்ரோன்களை எதிர்க்க அமெரிக்கா உக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தொடங்கிய போருக்குப் பிறகு இந்த Shahed தாக்குதல் ட்ரோன்களை எதிர்கொள்வதில் உக்ரைன் பெரிய அனுபவம் பெற்றுள்ளது. அதனால் அந்த அனுபவத்தை பயன்படுத்தி உதவி வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கூட்டாளிகளுக்கு உதவி
X-ல் வெளியிட்ட பதிவில், “தேவையான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உக்ரைனிய நிபுணர்கள் மற்றும் தேவையான வசதிகளை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “உக்ரைனின் பாதுகாப்பையும் மக்களின் உயிரையும் காக்க உதவும் கூட்டாளிகளுக்கு உக்ரைன் உதவுகிறது,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ட்ரம்ப் வரவேற்பு
இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகள் சில ஏற்கனவே Shahed ஒருதிசை தாக்குதல் ட்ரோன்களை எதிர்க்க உக்ரைனிடம் உதவி கேட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைனின் இந்த உதவியை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.