;
Athirady Tamil News

புங்குடுதீவில் இரவில் கேட்ட கதறல் சத்தம்! அதிரடியாக இருவர் கைது !! தடுக்கப்பட்டதா இன்னுமொரு வித்தியா பாணியிலான கொலைமுயற்சி ?

0

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அனலைதீவு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் தலைமையிலான மூவர் கொண்ட கும்பலினால் பொதுமகன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இதுவரை அக்கொலையாளிகள் கைது செய்யப்படாத நிலையில் பாரிய அச்சுறுத்தல் நிலைமை புங்குடுதீவில் காணப்படுவதால் கிராமெங்கும் இரவு ஏழு மணிக்கு பின்னர் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி காணப்படுகின்ற நிலையில் புங்குடுதீவு ஆலடி சந்தி கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பின்பகுதியூடாக செல்கின்ற ஒழுங்கையிலிருந்து நேற்றிரவு ஒன்பது மணியளவில் பலத்த சத்தமாக ஐயோ என்றவாறு பெண்ணொருவரின் கூக்குரல் கேட்டதாகவும் அக்குரலை கேட்ட தீவக சிவில் சமூகம் அமைப்பின் உபதலைவர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களும் அயலில் வசிக்கின்ற பொதுமகன் ஒருவரும் இணைந்து இருள் சூழ்ந்து காணப்படுகின்ற அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது அவ் ஒழுங்கையிலுள்ள வீடு ஒன்றில் நின்ற இளைஞர் அது ஆடு ஒன்றினை நாய்கள் பிடித்ததால் ஏற்பட்ட சத்தம் என்று இவர்களுக்கு கூறி மழுப்பியதாகவும் கூறப்படுகிறது . ஆனாலும் சந்தேகம் வலுத்ததால் அவர்களும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து அவ்வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர். ஏனெனில் புலம்பெயர் உறவுகளுக்கு சொந்தமான அந்த வீட்டினை பராமரிக்கும் போர்வையில் அவ்வீட்டில் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த கஜன் என்பவரும் நயினாதீவைச் சேர்ந்த இரு இளைஞர்களும் இணைந்து ஒரு இளம்பெண்ணை அவ்வீட்டுக்குள் அழைத்து சென்றதை ஏற்கனவே அயலவர்கள் பார்த்திருந்த நிலையிலேயே குறித்த முற்றுகை இடம்பெற்றதோடு குறிகாட்டுவான் மற்றும் ஊர்காவற்துறை பொலிசாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது . .

நயினாதீவை சேர்ந்த நிரோ என்கின்ற இளைஞர் அனலைதீவை சேர்ந்த திருமணமான 21 வயது பெண் ( நான்கு மாத குழந்தையின் தாய் ) ஒருவரோடு பழகி வந்துள்ளதாகவும் நிரோ என்பவரோடு இணைந்து நயினாதீவை சேர்ந்த கீர்த்தனன் அல்லது கீர்த்தி என்றழைக்கப்படும் 20 வயது இளைஞனும் புங்குடுதீவுக்கு வந்துள்ளோடு புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த நபருக்கு தொடர்பை ஏற்படுத்தி இப்பகுதியிலுள்ள குறித்த வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் போதை தலைக்கேறிய நிலையில் நிறைவெறியில் மூவரும் இணைந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற போது அப்பெண் கூக்குரலிட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். வீட்டுக்குள் நுழைவதற்குள் சட்டச் சிக்கல் காணப்பட்டதால் பொதுமக்கள் வீட்டுக்கு வெளியே நின்றவாறு சத்தமிட்டதால் நயினாதீவைச் சேர்ந்த நிரோ என்பவரும் அனலைதீவைச் சேர்ந்த குறித்த யுவதியும் பின்பக்கமாக தப்பிச்செல்ல வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களது பாஸ்போட் மற்றும் தேசிய அடையாள அட்டை மற்றும் பெண்களுக்குரிய ஆடைகள் அங்கு மீட்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவ்வீட்டினை சுற்றிவளைத்திருக்காவிடின் பாரிய அனர்த்தம் ஒன்று அங்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த நபர் ஒருவரும் நயினாதீவைச் சேர்ந்த கீர்த்தனன் என்பவரும் ஊர்காவற்துறை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேற்படி இருவரும் தரமான முறையில் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அத்தோடு சில வாரங்களுக்கு முன்பு நயினாதீவு பிரதேசத்தில் வீடு ஒன்றினை எரித்தமை தொடர்பாக மேற்குறிப்பிட்ட நிரோ மற்றும் கீர்த்தனன் ஆகியோர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறித்த அனலைதீவு யுவதியின் கணவர் வெளிநாடொன்றில் வசிப்பதாகவும் ஐந்து தினங்களுக்கு முன்பு கொழும்புக்கு செல்வதாக கூறிச் சென்றதாகவும் அவரது தொடர்பு கிடைக்காத நிலையில் பெற்றோர்கள் அவரை தேடிவருவதாகவும் கூறப்படுகின்றது .

அத்துடன் சமூக விரோதியாக காணப்படுகின்ற குறித்த புங்குடுதீவைச் சேர்ந்த நபரை மேற்படி வீட்டை பராமரிக்க அனுமதித்த புலம்பெயர் குடும்பத்தினருக்கு அந்நபரின் தவறான நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே பொதுமக்களால் தெரியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது .

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.