;
Athirady Tamil News

தெல்லிப்பளை கொடியேற்றம்

0

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

அதிகாலை 05 மணிக்கு ஆரம்பமாகும் பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது

அதனை தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று , 06ஆம் திகதி மாலை மஞ்ச திருவிழாவும் , 11ஆம் திகதி காலை 09 மணிக்கு தேர் திருவிழாவும் , மறுநாள் 12ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் , மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.

மகோற்சவ காலங்களில் பகல் வேளைகளில் ஆலயத்தில் அன்னதானம் நடைபெறவுள்ளது. அதற்காக பிடியரிசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு , அன்னதானத்திற்கு அரசி சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.