பெண்களை பார்த்தால்., இல்லை நினைத்தாலே பயம்! 55 ஆண்டுகளாக தனிமையில் வாழும் நபர்
பெண்கள் மீது பயம் காரணமாக 71 வயது நபர் ஒருவர் 55 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார்.
ருவாண்டாவைச் சேர்ந்த 71 வயதுடைய கலிக்ஸ்ட் ந்சாம்விடா (Callixte Nzamwita) என்ற நபர், கடந்த 55 ஆண்டுகளாக பெண்கள் மீது உள்ள தீவிரமான பயம் காரணமாக தனிமையில் வாழ்ந்துள்ளார்.
16 வயதில் இருந்தே அவர் தனிமையை தேர்ந்தெடுத்து, தனது வீட்டுக்குள் அடைந்து, சுவர் மற்றும் வேலியால் சுற்றி பெண்கள் அருகில் வர முடியாத வகையில் வாழ்ந்துள்ளார்.
இந்த மனநிலை Gynophobia என அழைக்கப்படுகிறது. இது குறிப்பிட்ட வகை பயமாக இருந்தாலும், மனநல கோளாறு என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
இந்த பயம் பெண்களைப் பற்றி சிந்திக்கும்போதே, திடீர் பதற்றம், மார்பில் இறுக்கம், அதிக வியர்வை, இதயத்துடிப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
அவரது வீட்டின் அருகில் உள்ள பெண்கள், அவரை நேரில் சந்திக்க முடியாததால் உணவுப் பொருட்கள் மற்றும் தேவையான பொருட்கள் தொலைவில் வைக்கின்றனர்.
தனிமையாக வாழ்ந்தாலும் கலிக்ஸ்ட் ந்சாம்விடா அதில் திருப்தியாக இருப்பதாகவும், பெண்கள் அருகில் வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.