பென்டகன் பெயா் போா்த் துறை என மாற்றம்
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகமான பென்டகனின் பெயா் போா்த் துறை என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையொப்பமிட்டாா்.
புரட்சிகரமான ராணுவத் தலைவா் என்ற பிம்பத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அவா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய முடிவுகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும். எனவே, பென்டகனுக்கு தற்காலிக இரண்டாம் நிலைப் பெயராக இதைப் பயன்படுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 1789-ல் உருவாக்கப்பட்ட போா்த் துறை, பின்னா் 1947-இல் பாதுகாப்புத் துறையாக மாற்றப்பட்டது. தற்போது, அதை மீண்டும் போா்த் துறையாக மாற்றப்படுவதை பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் தனது சமூக ஊடகப் பதிவில் வரவேற்றுள்ளாா்.