கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ் பதவியேற்பு
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பதில் கடமை அடிப்படையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய இன்று (10) புதன் கிழமை வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர்.எம். ஹாரீஸிடமிருந்து தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அம்பாறை மற்றும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருந்தவர் என்பதுடன் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக நீண்ட காலம் பணிபுரிந்து தற்பொழுது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வைத்தியர் ஏ. எல். எப். ரஹ்மான் ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.
இதன் போது கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி ஏ.எல். பாரூக், மருத்துவ அதிகாரி ஏ.ஆர்.எம். அஸ்மி, வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய பரிபாலகர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதானிகள், சிவில் அமைப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.









