;
Athirady Tamil News

விபத்தில் சிக்கி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலி

0

திருகோணமலை அநுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்து பாதசாரிக் கடவையின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்து இன்று (14) இடம் பெற்றுள்ளது. இவ்விபத்தில் மூதூர் சம்பூர் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.