;
Athirady Tamil News

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலி

0

ரஷ்யாவில் உக்ரைன் வான்வழித் தாக்குதல் நடத்தியல் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகின்றது.

உக்ரைன் மீது ரஷ்யா நேற்றிரவு முழுவதும் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

அத்தோடு, 30 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததுடன் இதில் சிலர் பலத்த காயமுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உக்ரைன் முழுவதும் பல்வேறு இடங்களில் 600 இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

சமீபத்திய வாரங்களில் உக்ரைன் மீதான அதன் வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளள நிலையில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், உக்ரைன் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 149 ட்ரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தினோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதலும் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய ட்ரோன்கள் தங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக போலந்து மற்றும் ருமேனியா கூறியதைத் தொடர்ந்து, சமீப காலமாக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.