;
Athirady Tamil News

திடீரென ஏற்பட்ட வயிறு வீக்கத்தால் உயிரிழந்த கிளிநொச்சி குடும்பஸ்தர்

0

திடீரென ஏற்பட்ட வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார்.

பன்னங்கண்டி – கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்து சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இவருக்கு திடீரென வயிறு வீக்கம் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அன்றிரவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.