;
Athirady Tamil News

உலகின் சிறந்த சுற்றுலா தளமாக இலங்கை தெரிவு

0

பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை இந்தத் தேர்வில் முக்கிய காரணங்களாகக் கருதப்பட்டுள்ளன.

முதன்மையான சுற்றுலா தளம்
நாடு முழுவதும் பரவியுள்ள கவர்ச்சிகரமான கடற்கரைகள், மலைப்பயண வாய்ப்புகள், பண்டைய இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் ஆகியவை இலங்கையை உலகின் முதன்மையான சுற்றுலா தலமாக உயர்த்தியுள்ளன.

இந்தத் தரவரிசை, ஒக்டோபர் மாதத்தில் அனுபவிக்கக்கூடிய பருவகால வசீகரம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக ‘டைம் அவுட்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் துருக்கி இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மற்ற முக்கிய சுற்றுலா தலங்களாக ஸ்பெயினின் வலென்சியா, அமெரிக்காவின் நியூயோர்க், பிலிப்பைன்ஸ், பூட்டான், போஸ்னியா மற்றும் ஹர்ஸகொவினா, ருமேனியாவின் டிமிசோரா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.