;
Athirady Tamil News

இதயம் நொறுங்கியது – விஜய் கைது செய்ய வாய்ப்பு?

0

விஜய் கைதாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

38 பேர் பலி
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் வேலுசாமிபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட இதுவரை 38 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் விஜய் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் இரங்கல்
இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக, இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.