;
Athirady Tamil News

யாழில் காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

0

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிப்பொருட்கள் யாழ் நவாலியில் நேற்று (02) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த தகவல் மானிப்பாய்
காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்றை தினம் (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த வெடிபொருட்கள் விசேட அதிரடி படையினரால் அகற்றப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.