கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் களைகட்டிய ஆசிரியர் தின விழா!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் மாணவர் மன்றம் நடாத்திய ஆசிரியர் தின விழா 08.10.2025 புதன்கிழமை காலை 08.30 மணிக்கு கலாசாலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் பழைய மாணவரும், முன்னாள் விரிவுரையாளரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய ம. சத்தியகுமார் கலந்துகொண்டார்.
விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர் இ. செந்தூர்ச்செல்வனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசாலை விரிவுரையாளர்கள் கலாசாலையில் அமைந்துள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
நிகழ்வில் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.



