;
Athirady Tamil News

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

டிரம்பின் மருத்துவ அறிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் மேரிலாந்தின் வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவமனையில் சுகாதார உடல் பரிசோதனையை மேற்கொண்டார்.

இந்த பரிசோதனைக்கு பிறகு, டிரம்பின் தனி மருத்துவர் சீன் பார்பபெல்லா வெள்ளை மாளிகை வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

65 வயது இதயத்துடன் டிரம்ப்
அந்த மருத்துவ அறிக்கையில், டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகியவை சிறப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ECG சோதனையில் டிரம்பின் இதய வயது அவரது தற்போதைய உண்மையான வயதை விட 14 வருடங்கள் இளமையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது டிரம்பின் தற்போதைய உண்மையான வயது 79, ஆனால் அவரது இதயத்தின் வயது தற்போது 65 வயதுடையவரின் இதயம் போல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அமெரிக்காவில் ஜனாதிபதியாக பதவியேற்ற வயதான தலைவர் என்ற சாதனையையும் டொனால்ட் டிரம்ப் படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூலையில் டிரம்பின் கால் வீக்கம் மற்றும் கைகளில் இருந்த காயம் உலக அளவில் டிரம்பின் உடல் நிலை குறித்த கவலைகளை தூண்டியது, ஆனால் அவை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் என அப்போது விளக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.