யாழ். மாநகரசபையால் வீதிகள் புனரமைப்பு!_முதல்வர் திருமதி வி.மதிவதனி ஆரம்பித்து வைத்தார்.
யாழ். மாநகரசபையின் 02ஆம் வட்டாரம் கலட்டி அம்மன் வீதி வேலைகளை யாழ்,மாநகரசபை முதல்வர் திருமதி வி.மதிவதனி அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
02ஆம் வட்டாரத்தின் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் இனது அழைப்பின் பேரில் கலந்துகொண்ட முதல்வர் திருமதி வி.மதிவதனி வீதி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்
நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் நந்த்கோபாலன், யாழ்.மாநகரசபை பிரதி மேயர் இ.தயாளன், யாழ்.மாநகரசபையின் மராமத்துக்குழு தலைவர் ஜெ.மயூரன் மற்றும் வட்டார உறுப்பினர் ப. தர்சானந் மற்றும் முதல்வரின் தனிச்செயலாளர் செல்வி.பானுஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
