;
Athirady Tamil News

யாழ்.மாநகர உறுப்பினர்களுக்கு பழுதடைந்த உணவுப் பொதிகள் 

0

யாழ்ப்பாணம் மாநகரசபையின் நேற்றைய அமர்வின்போது, உறுப்பினர்களுக்கு பழுதடைந்த உணவே வழங்கப்பட்டது என்று சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.

மாலை 3 மணியளவில் உணவு இடைவேளைக்காக சபை ஒத்திவைக்கப்பட்டது. உணவு வேளையின் பின்னர் சபை ஆரம்பித்தபோது, மாநகர உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பழுதடைந்து இருந்தது என்று மாநகரசபை உறுப்பினர்களான சு.நிஷாந்தன், ப.தர்ஷானந் ஆகியோர் முறையிட்டனர். தாம் உயர்தர விடுதிகளில் இருந்து உணவைக் கேட்கவில்லை என்றும், தரமான உணவையே கேட்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாநகர சுகாதார குழுத் தலைவர் சாருஜன், தரமான உணவை வழங்குவதற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், தரமான உணவை வழங்குவது தொடர்பில் நிதிக்குழுவில் ஆராய்ந்து முடிவெடுப்பதாக மாநகர முதல்வர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.