;
Athirady Tamil News

மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி, ஒருவர் காயம்

0

மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.

மத்திய மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா துறைமுகத்தில் 14 இந்தியர்கள் உள்பட பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு வியாழக்கிழமை கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.

மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பெய்ரா துறைமுகத்தில் நடந்த படகு விபத்தில் மூன்று இந்தியர்கள் உள்பட பலியானதற்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் காயமடைந்து பெய்ராவில் சிகிச்சை பெற்று வரும் இந்தியரை, தூதரக அதிகாரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த விபத்துக்கான சரியான காரணம் மற்றும் படகில் இருந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்த விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.