இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டம் இனி யாருக்கு?
பிரித்தானிய மன்னரான சார்லசின் தம்பி இளவரசர் ஆண்ட்ரூ மோசமான சர்ச்சைகளில் சிக்கியதால் ஏற்பட்ட கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து தனது பட்டங்களைத் துறக்க முன்வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் வகித்த கோமகன் பட்டம் அடுத்து யாருக்கு என கேள்வி எழுந்துள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டம் இனி யாருக்கு?
இளவரசர் ஆண்ட்ரூ வகித்த பட்டங்களில் ஒன்று, யார்க் கோமகன் (Duke of York) என்பதாகும்.

இந்த பட்டம், மரபுப்படி, நாட்டை ஆள்பவரின் இரண்டாவது மகனுக்குக் கொடுக்கப்படும் ஒரு பட்டமாகும்.
ஆக, இளவரசர் ஆண்ட்ரூவுக்குப் பிறகு, எப்போது இளவரசர் வில்லியம் மன்னராகிறாரோ, அப்போது இந்த யார்க் கோமகன் பட்டம் குட்டி இளவரசரான லூயிஸைச் சென்றடையக்கூடும்.