;
Athirady Tamil News

யாழில் பரபரப்பு: இலக்கத்தகடற்ற புதிய காரில் ஹெரோயின் கடத்திய பிரபல வர்த்தகரின் மகன் கைது!

0

யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 11கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு கையூட்டு வழங்க முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.